காங்கோ நாட்டின் கிசான்டு என்ற நகரில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பெட்ரோல் டேங்கர் அதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.