ப்ரோ கபடி லீக்கின் 6-வது சீசன் இன்று தொடங்குகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ப்ரோ கபடி லீக் குறித்து விஜய் சேதுபதி ட்விட்டர் பதிவில், 'இது நம்ம ஆட்டம்! உங்களுக்காக தலைவாஸ் பாய்ந்து போராட உள்ளனர். உங்களையும் வீரர்களையும் உற்சாகப்படுத்த வருகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.