சென்னை கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், '30 வருடங்களுக்கு முன்னாள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் 25 வயது ஆகியிருக்கும். தமிழகத்துக்கு என்று தனித்துவம் உள்ளது. தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை' என்று தெரிவித்தார்.