மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``நாடு முழுவதும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ஆகக் குறைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நக்சலைட்களை முழுமையாக ஒழித்து விடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.