கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவு துப்பாக்கிச்சூடு போட்டியில் இந்தியாவின் துஷர் மானே கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் 247.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.