பரிசளிப்பு விழாவில் ஆசியக்கோப்பையை இளம்வீரர் கலீல் அஹமது கையில் ஏந்தி இருந்தார். இதுகுறித்து கலீல் அஹமது, `நான் அணியில் மிகக் குறைந்த வயதுடைய வீரர். தோனி, ரோஹித் இருவரும் என்னிடம் ஆசியக்கோப்பையை அளித்தனர். அந்தத் தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான் எமோஷனல் ஆகிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.