இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஜூடோ போட்டியில் 44 கி. எடைப்பிரிவில் இந்தியாவின் தாபாபி தேவி வெள்ளி வென்றார். உலக அரங்கில் ஜூடோ பிரிவில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். வாழ்த்துகள் தாபாபி தேவி!