தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1033-வது சதய விழாவுக்காக பந்தக்கால் ஊன்றப்படும் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சதயவிழாவின்போது குஜராத் மியூசியத்தில் உள்ள ராஜராஜன் சோழன் சிலையை மீட்டு கொண்டு வந்து விழாவை நடத்த வேண்டும் என்ற எங்களின் கனவு ஆசை இந்த சதய விழாவில் நிறைவேறி விட்டதாக தெரிவித்தனர்.