காதல் திருமணம் குறித்து முதல் முறையாக, சாய்னா மனம் திறந்துள்ளார். `2008-ம் ஆண்டு முதல், நானும் காஷ்யப்பும் வெளிநாடுகளில் நடைபெறும் பேட்மின்டன் தொடர்களில் பங்கேற்கச் சென்றோம். இருவருக்கும் இடையேயான அன்பு அதிகரித்தது. டிசம்பர் மாதத்தில் நேரம் சரியாக அமைந்ததால், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.