மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இதில், என்.டி.ஆரின் கதாபாத்திரத்தில் அவரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்க, மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.