அர்ஜென்டினாவில் நடக்கும் இளையோர் ஒலிம்பிக் தொடரின் பளுதூக்குதல் போட்டியில்  15 வயதான இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுன்கா, 62 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். இதில் ஸ்னாட்ச்சில் (snatch) 124 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க்கில் 150 கிலோவும் என மொத்தம் 274 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றுள்ளார்.