துருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பணி செய்பவர். இவர், கடந்த ஏப்ரல் மாதம் வாடிக்கையாளருக்கு விநியோகிக்கவேண்டிய பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து, அதை செல்ஃபியும் எடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.