`இடம் பொருள் ஏவல்’ படம் எடுத்து சில வருடங்கள் ஆக விட்டன. சில காரணங்களால் படத்தோட ரிலீஸ் தள்ளிப் போனது. படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியிடம் இதைப் பற்றிப் பேசினேன். `சண்டக்கோழி 2' ரிலீஸூக்குப் பிறகு இந்தப் படத்தின் ரிலீஸ் இருக்கும்னு நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்' என்றார் சீனு ராமசாமி.