ஆளுநரின் பணியில் தலையிட்டதாகக் கூறி சட்டப்பிரிவு 124-ன் கீழ் போலீஸார் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை கைது செய்தனர். இந்நிலையில் அவரை நீதிமன்றக் காவலில் எடுக்கக்கோரிய வழக்கில், சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என்று கூறிய நீதிபதி, அவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப மறுத்து விட்டது.