நயன்தாரா கதாநாயகியாக  நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. 'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் இப்படத்தை 'லக்‌ஷ்மி','மா' குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். `ஐரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.