சர்வதேச அளவில் மிகவும் அச்சுறுத்தும் விஷயமாகத் தற்போது இருப்பது உலக வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றமும்தான். ஐ.நா மாநாட்டில், உலகம் அழிவை நோக்கிச் செல்வதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெப்பமாதல் அளவை குறைக்காவிட்டால், 2030-ம் ஆண்டில் பல்வேறு நிலைகளில் உலக வாழ்க்கை பாதிப்படையும் என்ற அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.