ஐ.நா வின் தூதுவராகப் பணிபுரிந்து வந்த நிக்கி ஹேலே தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்தப் பதவிக்கு இவான்கா ட்ரம்ப் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தகவலை இவான்கா மறுத்துள்ளார். டிவிட்டரில்,  `தூதுவர் நிக்கிக்கு பதிலாக வல்லமை மிக்க ஒருவரையே அதிபர் நியமிப்பார். அந்தத் தூதுவர் நானாக இருக்காது’ எனப் பதிவிட்டுள்ளார்