நடிகர் சிவகார்த்திகேயன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்ற 10 வயது வெள்ளைப் புலியை அடுத்த 6 மாதத்துக்குத் தத்தெடுத்துள்ளார். இதற்காக அவர் பூங்கா நிர்வாகத்துக்கு ரூபாய் 2.12 லட்ச வழங்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்தச் செயல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.