ரஜினி மக்கள் மன்றத் தலைமைக்கு எதிராகக் கொடிபிடித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், மன்றத்தை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தலைமையின் இந்தச் செயல், ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 20-ம் தேதி அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ரஜினி நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.