நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் சர்கார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அதில் ரசிகர்கள் டீசர் எப்போது வெளியாகும் என்று கேட்டிருந்தனர். இந்நிலையில், சர்கார் படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.