நக்கீரன் கோபால் வழக்கு குறித்து நேற்று சட்டதுறையினருடன் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இந்தத் தகவல் நக்கீரன் கோபாலுக்குத் தெரிந்தாலும், `அவர்கள் மேல்முறையீடு செய்யட்டும். அப்போதும் நாம் வெளியே வந்துவிடுவோம்' என்று சொல்லியுள்ளார்.