இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் சௌரவப் சௌதரி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார். 244.2 புள்ளிகளில் இந்த இலக்கை எட்டியுள்ளார் சௌரவப். இவருக்கு அடுத்த நிலையில், தென்கொரியாவின் வீரரான சங் யுங்கோ 236.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.