வைகையின் தென்கரையோர மக்கள் தாங்களாக முன்வந்து, பத்தாண்டுகளாக வைகைக் கரையில் மரங்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று அங்குள்ள மரங்கள் ஆற்றங்கரையை ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி மரங்களை அகற்றக் களமிறங்கியது பொதுப் பணித்துறை. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், அதிகாரிகளிடம் அதைத் தடுத்து, போராடினர்.