கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கொடைக்கானல், ஊட்டி, டெல்லி, லண்டன், ஸ்பெயின் ஆகிய இடங்களில் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 54 கோடி ஆகும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை எந்த நீதிமன்றத்திலும் நிற்காது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.