தாமிரபரணி புஷ்கரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு நீராடினார். பின்னர் பேசிய அவர், `தமிழக மக்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுடன் தாமிரபரணி ஆறு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. தாமிரபரணி நதியின் பெருமைகளையும் கலாசார உயர்வுகளையும் அடுத்த தலைமுறை அறிந்துகொள்ளும்வகையில் பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார்.