ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களுக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்குத் தானமாக கொடுத்துள்ளனர். புற்றுநோயால் தந்தை இழந்த சுப்புராவ் இனி இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக தனது நிலத்தை மருத்துவமனைக்கு கொடுத்து நெகிழ்வைத்துள்ளார்.