ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனையானது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் அதிகளவு வாகனம் விற்பனையாகி  உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,69,138 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவரை எந்த ஒரு இருசக்கர வாகன நிறுவனமும் விற்பனை செய்திராத அளவு இது.