ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவிச்சினின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரரான நிக் ஹேக் இருவரையும் சுமந்தபடி  சோயுஸ் MS-10   ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆனால் சில நிமிடங்களில் அதில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு விண்வெளி வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.