சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. அதில் 3000 க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்திருப்பதாகவும், 16 மீட்டருக்கு கீழ் தங்கம் கிடைத்ததாகவும், ஆய்வின் போது கிடைத்த பொருள்கள் கலிபோர்னியாவிற்கு கார்பண்டேட்டிங் அனுப்பப்பட இருப்பதாகவும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.