கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்தும் நோக்கில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி அகர்வால் நேற்று உயிரிழந்தார். 87 வயதான ஜி.டி அகர்வால் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 109 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.