ட்டிமன்றப் பேச்சாளராகவும், தனியார் வங்கி மூத்த துணைத் தலைவராகவும் இயங்கிவருபவர், பாரதி பாஸ்கர். சினிமா வாய்ப்பு குறித்து அவர் பேசுகையில் `பட்டிமன்ற உலகில் அடையாளம் பெற்றதும், எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் ஆர்வமில்லாததால் மறுத்துவிட்டேன். ஒருவேளை கே.பாலசந்தர் சார் என்னை நடிக்கக் கேட்டிருந்தால், நிச்சயம் நடித்திருப்பேன்' என்றார்.