90களில் கம்ப்யூட்டரில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த Winamp மீடியா பிளேயர் அடுத்த வருடம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் Winamp ப்ளேயருக்கும் அடுத்த வருடம் முதல் அப்டேட்கள் தரப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.