சபரிமலையில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் மினிட் செய்தியாளர் சரிதா பாலன் மற்றும் ரிபப்ளிக் டிவி-யின் பூஜா ஆகியோரை ஐயப்ப பக்தர்கள் தாக்கியதாக நியூஸ் மினிட் ஆசிரியர் தன்யா தெரிவித்திருக்கிறார். அடையாள அட்டையைக் காண்பித்த பின்னரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.