குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் மட்டுமல்ல.. அவளுடன் இணைந்து 8 காளிகளும் ஆட்சி செய்கிறார்கள். தசரா திருவிழாவிற்காக குலசேகரன்பட்டினம் வரும் அநேக பக்தர்களுக்கு இங்கு 8 காளி கோயில்கள் இருப்பது தெரிவதில்லை. முத்தாரம்மன் கோயிலைச் சுற்றியே 1.வீரகாளியம்மன், 2. பத்திரகாளியம்மன், 3.முப்பிடாரி அம்மன், உள்ளிட்ட 8 அம்மன் கோயில்கள் உள்ளன.