ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை, 2 கோடியைத் தாண்டிவிட்டதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்த சாதனையைப் படைத்திருக்கும் ஒரே ஸ்கூட்டர் இதுதான். முதல் ஒரு கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கு, 15 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட ஹோண்டா அடுத்த ஒரு கோடி ஸ்கூட்டர்களை வெறும் 3 ஆண்டுகளில் விற்பனை செய்துள்ளது.