குலசை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் 10-ம் நாள் திருவிழாவான இன்று இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பக்தர்களின் சரண கோஷத்தால் குலசை குலுங்கியுள்ளது. இன்று காலை முதலே குலசை ஊர் நுழைவு வாயில் தொடங்கி முத்தாரம்மன் கோயில் வளாகம், கடற்கரைப் பகுதி வரை பக்தர்களின் தலைகளாகவே தென்படுகிறது.