தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ``ஓம் காளி... ஜெய் காளி" என விண்ணை முட்ட கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். மகிஷாசூர வதத்தைக் காண வந்திருந்த பக்தர்கள்  மாலை 6 மணி முதலே கடற்கரையில் குவிந்தனர்.