இந்தியாவில், 2020-ம் ஆண்டுக்குள் 70 லட்சத்துக்கும் அதிகமான எலெக்ட்ரிக் வண்டிகள் சாலைகளில் பயணிக்க வேண்டும் என்கின்ற கனவுக்கு ஆபத்து வந்துவிடும் போலிருக்கிறது. 2017-18 நிதியாண்டில்  எலெக்ட்ரிக் வண்டிகளின் விற்பனை 40% சரிந்துள்ளது. இந்த நிதியாண்டில், வெறும் 1,200 எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.