ரெட்மி நோட் 6 புரோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.அந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்விற்காக ஊடகங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதன் மூலமாக புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.