RX100 பைக்கை யமஹா மீண்டும் கொண்டு வரப்போகிறது என சமூகவளைதளங்களில் சமீபத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து யமஹா மூத்த அதிகாரி ஒருவரிடம் விசாரிக்கையில், ``RX100 பைக் திரும்ப வரப்போவதா சொல்வது சுத்தப் பொய். 6 மாதத்துக்கு ஒரு முறை இப்படி யாராவது வதந்திகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.