10-18ம் தேதி வரையிலான திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது 7 லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 14-ம் தேதி கருடசேவையின்போது மட்டும் 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 24,36,000 லட்டுகள் விற்பனையாகி உள்ளன. உண்டியல் வசூலாக 16 கோடியே 14 லட்சம் ரூபாய்  கிடைத்துள்ளது.