பெரும்பாலானோர் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் கீ-போர்டுகளில் ஒன்று கூகுளின் G-board. தற்போது இதன் அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட்டிருக்கும் கூகுள் புதிதாக Floating Keyboard எனப்படும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலம் கீ-போர்டை நம் வசதிக்கேற்ப திரையில் இடம்மாற்றிக்கொள்ளலாம்.