விழுப்புரத்தில் கூழுக்கு 5 வகை சைடு டிஷ் கொடுத்து, தனது திருமண விருந்தை அசத்தியிருக்கிறார் தினேஷ் என்ற இளைஞர். விருந்துக்குச் சென்ற உறவினர்கள், பாரம்பர்ய உணவான கூழும் அதற்கு சைடு டிஷ்ஷாக மாங்காய், இஞ்சி மற்றும் பூண்டு ஊறுகாய், பச்சைமிளகாய், அரிசி வத்தல் போன்றவை அளிக்கப்பட்டதைப் பார்த்து அசந்துபோனார்கள்.