இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போன்களில் ஒன்றான 'ஒன்ப்ளஸ் 6T' அக்டோபர் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். ஒரே நேரத்தில் அதிக நபர்கள் அன்பாக்ஸ் செய்யும் கின்னஸ் சாதனைக்கு வாடிக்கையாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது அந்நிறுவனம்.