கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் 100 மூட்டைப் பச்சரிசி சாதம் சிவலிங்கம் மீது சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னாபிஷேக நிகழ்ச்சியையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.