கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் பாஸ்டியன் வினய்சுந்தர் என்ற யானையை வளர்த்து வருகிறார். கடந்த சில நாள்களாக தூங்குவதற்கு சிரமப்பட்டு வந்த யானைக்குப் பாட்டுப்பாடி ஒரு குழந்தையைப் போல் பாவித்து தூங்கவைக்கிறார் அந்தப் பாகன். அதுவும் இளையராஜாவின் பாட்டுப்பாடி தூங்கவைக்கிறார். இந்த வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.