கூகுளின் புதிய திட்டத்தின்படி பயன்பாட்டாளர்கள் எளிதாக தங்களது சர்ச் தொடர்பான தகவல்களைப் பார்க்கவோ, மாற்றவோ முடியும். மேலும் ப்ரைவசி கன்ட்ரோல்களையும், எப்படி கூகுள் நிறுவனம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதையும் எளிதாக இனி பார்க்கமுடியும். இதைப்பற்றி விரிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது கூகுள்.