தன் குழந்தையை அருகிலுள்ள டேபிள் ஒன்றில் படுக்கவைத்துவிட்டு, பெண் காவலர் ஒருவர் தனது பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் வைரலானது. அந்தப் பெண் காவலருக்கு  எல்லா திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. தற்போது, அந்தப் பெண் காவலரின் நிலை அறிந்து, உயர் அதிகாரிகளால் மறுதினமே அவரின் சொந்த ஊருக்குப் பணியிட மாற்றம் தரப்பட்டுள்ளது.