முக்கிய சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், தனது தோற்றத்தை மாற்றும் முயற்சிகளில் செப்டம்பரில் இருந்து ஈடுபட்டு வருகிறது. இதில் தோற்றத்தில் மட்டுமில்லாமல், புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சோதனைக்காக சில கணக்குகளுக்கு மட்டும் தற்போதே மாற்றங்கள் செய்து, டெஸ்ட் செய்யப்பட்டுவருகிறது ட்விட்டர்.