14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் குஜராத் சிறுவன் பிரியான்ஷூ மோலியா 556 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். 13 வயதாகும் இவர் 2 நாள்கள் பேட் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியுமே எனது ரோல் மாடல் எனக் கூறும் இந்தச் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.